கனவு காடு’ திட்டம் வருவாய் துறையிடம் ஒப்படைக்கப்படும்: அமைச்சர் அரவிந்தலிம்பாவளி தகவல்

பெங்களூரு: பெங்களூரு விதானசவுதாவில் மலைநாடு பகுதிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள், அதிகாரிகளுடன் அமைச்சர் அரவிந்தலிம்பாவளி ஆலோசனை கூட்டம் நடத்தினார். பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய

தாவது: மலைநாடு பகுதி களின் வனத்துறை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்ட தொடரின் போது உறுதியளித்தேன். அதன்படி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மலைநாடு பகுதிகளை சேர்ந்த 20 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். மலைநாடு சில பகுதியில் சாலை வளர்ச்சிக்கு சில சட்ட சிக்கல் உள்ளது. சாலை அமைக்கும் நிலம் தேசிய வனத்துறையிக்கு சொந்தமானதாக இருந்தால் மத்திய அரசு அனுமதி பெற வேண்டும். மாநில அரசின் நிலமாக இருந்தால் அதிகாரிகளே இது குறித்து முடிவு எடுக்கலாம்.  வனப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அக்கு பத்திரம் வழங்கும் திட்டம் வருவாய் துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படும். வடகர்நாடக பகுதியில் இந்த பிரச்னை அதிகமாகவுள்ளது.

 சில கிராமங்களை வனப்பகுதியிலிருந்து வெளியே இடமாற்றம் செய்ய நிதி பற்றாக்குறையுள்ளது. இடமாற்றம் செய்வதற்கு வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஒப்புக்கொண்டால் வரும் மாநில பட்ஜெட்டில் நிதி ஒதுக்கினால் திட்டம் நிறைவேற்றப்படும்.  காட்டு யானைகள், மனிதர்கள் இடையே கலவரம் அதிகமாகவுள்ளது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். இதை கட்டுப்படுத்த யானை நடமாட்டமுள்ள பகுதிகளை சுற்றி ரயில் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. இது வெற்றியும் பெற்றுள்ளது.  இதை முழுமையாக செய்து முடிக்க வசதியாக மத்திய வனத்துறை, ரயில்வே அமைச்சர்களை சந்தித்து இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். கஸ்தூரிரங்கன் அறிக்கையை மாநில அரசு இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அது தொடர்பாக விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கவில்லை. தொடர்ந்து வனத்துறையிக்கு உட்பட்ட 6.5 லட்சம் ஏக்கர் டிரீம் பாராஸ்ட்(கனவு காடு) வருவாய் துறையிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.

Related Stories:

>