மார்ச் 27ம் தேதி லோக் அதாலத்

தங்கவயல்: வரும் மார்ச் மாதம் 27ம் தேதி தங்கவயல் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக தீர்த்து கொள்ளும் வகையில் (லோக் அதாலத்) என்ற மக்கள் நீதி மன்றம் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் தங்கவயல் நீதிமன்றத்தில் செஷன்ஸ் நீதிபதி பவனேஷ் தலைமையில் நடந்தது. நீதிபதிகள் மகேஷ் பாட்டீல், ரூபா, கிரண், நஸ்ரத் கான், போலீஸ் டி.எஸ்.பி.உமேஷ் தலைமையில் போலீஸ் அதிகாரிகள், வங்கி, ஆயுள் காப்பீடு, அதிகாரிகள்  வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நடக்கும் மக்கள் நீதிமன்றங்களில் தீராமல் நிலுவையில் உள்ள சிவில் மற்றும் குற்ற வழக்குகள், விபத்து, வங்கி கடன் தொடர்பாக சமரசமாக தீர்த்து கொள்ள கூடிய வழக்குகளை தீர்த்து கொள்ளலாம்.

Related Stories: