கடன் வாங்கிய போது அளித்த வெற்று பத்திரத்தில் ரஜனிகாந்த் பெயரை தானே எழுதி கொண்ட பைனான்சியர்: உயர்நீதிமன்றத்தில் கஸ்தூரி ராஜா குற்றச்சாட்டு

சென்னை: கடன் வாங்கிய போது அளித்த வெற்று பத்திரத்தில் ரஜனிகாந்த் பெயரை தானே எழுதிக் கொண்டதாக பைனான்சியர் மீது உயர்நீதிமன்றத்தில் கஸ்தூரி ராஜா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா, என்னிடம் ரூ.65 லட்சம் கடன் வாங்கினார். இந்த தொகையை தான் தரவில்லை என்றால், தன் சம்பந்தியான ரஜினிகாந்த் தருவார் என்று கடிதம் கொடுத்தார். தற்போது, அவர் கொடுத்த பணத்தை தரவில்லை. அதனால், தன் பெயரை தவறாக பயன்படுத்திய கஸ்தூரி ராஜா மீது ரஜினிகாந்த் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால், இருவரும் சேர்ந்து என்னை ஏமாற்றியதாக அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கஸ்தூரி ராஜா சார்பில் ஆஜராக வக்கீல் காஜா மொய்தீன் ஹிஸ்தி, கஸ்தூரி ராஜா ரூ.10 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அதை வட்டியுடன் திருப்பியும் கொடுத்து விட்டார். கடன் வாங்கியபோது கையெழுத்து போட்டு கொடுத்து வெற்று காகிதத்தை போத்ரா திருப்பித்தரவில்லை. பலமுறை திருப்பிக் கேட்டும் தராத போத்ரா, அதில் கடன் தொகையை திருப்பி தரவில்லை என்றால், சம்பந்தி ரஜினிகாந்த் திருப்பித்தருவார் என்று அவரே எழுதிக் கொண்டு, கஸ்தூரி ராஜா எழுதிக் கொடுத்ததாக பொய்யான ஆவணங்களை தயாரித்துள்ளார். இதை போலீஸ் விசாரணையிலும், செக் மோசடி வழக்கின் குறுக்கு விசாரணையிலும் போத்ராவே ஒப்புக் கொண்டுள்ளார் என்று வாதிட்டார்.

இதையடுத்து, ரூ.65 லட்சம் எப்படி கொடுக்கப்பட்டது என்று மனுதாரர் தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு ககன்போத்ரா, ரொக்கமாக வழங்கப்பட்டது என்று கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கஸ்தூரிராஜாவுக்கு ரூ.65 லட்சம் எப்படி கொடுக்கப்பட்டது? கடன் கொடுத்த ஆண்டில் போத்ரா தாக்கல் செய்ய வருவான வரி கணக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை வருகிற மார்ச் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories:

>