×

போராடும் போக்குவரத்து கழக ஊழியர்களை அழைத்துப்பேச முதல்வர் முன்வருவாரா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி இருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், படித்து கல்வித் தகுதி பெற்று, தமது எதிர்காலத்தை நினைத்து, மிகுந்த கவலையுடனும் எதிர்பார்ப்புடனும் காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்து, அவர்களுக்கான வாய்ப்புகள் வேறு எந்த வழியிலும் பறிபோகாமல் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை வகுத்துச் செயல்படுத்துவதும் அவசியம். உரிய பயன்களை அளிக்காமல் ஒருபுறம் நிந்தித்து -  போராடும் அரசு ஊழியர்களைக் கொச்சைப்படுத்தி, வழிமறித்து, இரவோடு இரவாக  கைது செய்து, அடக்குமுறைகளைக் கையாண்ட அரசு ஊழியர்கள் விரோத மனப்பான்மை கொண்ட - முதலமைச்சர் பழனிசாமியின் வறண்ட இதயத்தை அரசு ஊழியர்கள் என்றும் மறக்க மாட்டார்கள். இப்போதாவது போக்குவரத்துக் கழக ஊழியர்களை முதலமைச்சர் நேரில் அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வருவாரா?

Tags : Transport Corporation ,DMK ,MK Stalin , Will the Chief Minister come forward to call the struggling Transport Corporation employees? Question from DMK leader MK Stalin
× RELATED சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு...