புதிய கட்சி தொடங்கினார் மன்சூர் அலிகான்

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் புதிய அரசியல் கட்சியை துவக்கியுள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்தவர் மன்சூர் அலிகான். வரும் சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுவதாக அவர் அறிவித்து இருந்தார். இந்நிலையில் திடீரென அவர் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற பெயரில் அவர் கட்சியை ஆரம்பித்துள்ளார். இந்த கட்சி சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடவும் மன்சூர் அலிகான் முடிவு செய்துள்ளார்.

Related Stories:

>