62 அலுவலக உதவியாளர் பணிக்கு 5ம் வகுப்பு தேர்ச்சி என அறிவிப்பு: 3,700 பிஎச்டி உட்பட 82,000 பட்டதாரிகள் விண்ணப்பித்த சோகம்!!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் காவல்துறையில் 62 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு முனைவர் பட்டம் பெற்ற 3,700 உட்பட 82,000 பேர் விண்ணப்பித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்ததே இதற்கான காரணம் என்று கண்டனம் தெரிவித்து வேலை கொடுங்க மோடி என்ற தலைப்பில் 60 லட்சம் பேர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் காவல்துறையில் 62 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 5ம் வகுப்பு தேர்ச்சி என்ற தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணியிடங்களுக்கு பிஎச்டி முடித்து முனைவர் பட்டம் பெற்ற 3,700 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

முதுகலை பட்டதாரிகள் 28,000 பேரும் பட்டதாரிகள் 50,000 பேரும் உதவியாளர் பணிக்காக விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் உள்ள 62 பணியிடங்களுக்கு 82,000 பட்டதாரிகள் உட்பட 93,000 பேர் போட்டிப் போடுவது நாடு முழுவதும் விவாத பொருளாகி உள்ளது. நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருப்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக லட்சக்கணக்கான மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் வேலை வழங்க பிரதமரை வலியுறுத்தியும் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories:

>