கோவை வருகை தரும் பிரதமர் மோடிக்கு விவசாயிகள் எதிர்ப்பு.: கீழ்பவானி கால்வாயில் கான்கீரிட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்

கோவை: கோவையில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கிவைக்க வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் தொடர் போராட்டங்கள் நடத்த உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.  பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று கோவை வருகை தர உள்ளார். இதில் ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாழ்வாயில் கான்கீரிட் தளம் அமைக்கம் பணி உள்பட ரூ. 934 கோடி மதிப்பிலான திட்டமும் அடங்கும்.

கீழ்பவானி கால்வாய் மூலமாக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2.7 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசானவசதி பெற்று வருகிறது. இந்நிலையில் 200 கி.மீ நீளம் கொண்ட கீழ்பவானி கால்வாயில் கான்கீரிட் தளம் அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர் செறிவூட்டுதல் தடை பெறும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் என்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விவசாயிகள் நாளை முதல் போராட்டங்களை தீவிரப்படுத்த உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் விவசாயிகளிடம் கருத்துக்களை முறையாக கேட்காமல் நிறைவேற்ற முயலும் இந்த திட்டத்தால் மறைமுகமாக பாசானவசதி பெரும் பகுதிகள் பாலைவனமாக மாறும். மேலும் கரையோரங்களில் உள்ள 1000-க் கணக்கான மரங்கள் வெட்டப்படும் சூழலும் உருவாகும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: