டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தால் அரியானா எம்.எல்.ஏ. வீடு , அலுவலகங்களில் ஐடி ரெய்டு!!

சண்டிகர் : டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அரியானா மாநில சுயேட்சை எம்எல்ஏ-வின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அரியானா மாநிலத்தில் 2019ம் ஆண்டு ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மேகம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட பல்ராஜ் குண்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து அங்கு அமைந்த பாஜக அரசுக்கு ஆதரவளித்த அவர், டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்தார்.

தொடர்ந்து கட்டார் அரசுக்கு அளித்த ஆதரவை அண்மையில் வாபஸ் பெற்றார். இந்த நிலையில் பல்ராஜ் குண்டுவின் குருகிராம் வீடு, அவரது சகோதரர்கள் வசிக்கும் ரோஹ்டக் வீடுகள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில் 100 அதிகாரிகள் ஈடுபட்டதாக பல்ராஜ் குண்டுவின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த காரணத்தினால் பழி வாங்கும் நடவடிக்கையாக மோடி அரசு வருமான வரித்துறையை தூண்டிவிட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories: