உயர் அழுத்த மின்சார கம்பி அருந்ததால் சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் சேவை துண்டிப்பு!: பொதுமக்கள் அவதி..!!

சென்னை: ரயில் பாதையில் உள்ள உயரழுத்த மின்கம்பி அருந்துதல் சென்னை தாம்பரம் மற்றும் கடற்கரை இடையே இயக்கப்படும் ரயில்சேவை 2 மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது. தாம்பரத்தில் இருந்து சென்னை மார்க்கத்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மின்சார ரயில்கள் இயக்க பயன்படுத்தப்படும் கேபிள்கள் அறுந்து விழுந்தது. இதனால் முக்கிய வழித்தடத்தில் ரயில் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. தாம்பரத்தில் உள்ள 5 மற்றும் 6வது பிளாட் பாம் மூலம் சில ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தால் பேருந்து சேவை பெருமளவு குறைவாக இயக்கப்படும் சூழலில் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

சென்னைக்கு அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் நிலைமை சீராகி வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்துள்ளனர். இதனிடையே பேருந்து போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக கூடுதல் ரயில்களை இயக்க புறநகர் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவேளையில் ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>