×

இந்திய கம்யூ. தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு  காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் உடல் நலக் குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக தொற்று, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக சேர்க்கப்பட்டிருப்பதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Tags : Indian Comm. ,D. Pandian , Indian Comm. Chairman D. Pandian admitted to hospital
× RELATED அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில்...