×

தமிழகம் முழுவதும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகம் எனும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் புரோகிராமர்கள், சிஸ்டம் அனலிஸ்ட்ஸ் போன்ற பணியிடங்களுக்கு தனியார் ஏஜன்சி மூலம், ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 2005 ம் ஆண்டு முதல் 2018 ம் ஆண்டு வரை தொடர்ந்து பணியாற்றி வரும் இவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க போக்குவரத்து ஆணையர், உள்துறை செயலாளருக்கு 2014 மற்றும் 2017 ம் ஆண்டுகளில் பரிந்துரைகள் அனுப்பினார். இருப்பினும், தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்கவில்லை எனக் கூறி சிவகுமார், கார்த்திகேயன் உள்பட 27 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த மனுக்களில், வணிகவரித் துறை, நகராட்சி நிர்வாகம் போன்ற துறைகளில் பணியாற்றியவர்களுக்கு, பணிநிரந்தரம் வழங்கப்பட்டுள்ளதால், தங்களுக்கும் பணிநிரந்தரம் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

இந்த வழக்குகளுக்கு பதிலளித்த உள்துறை செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமோ, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமோக தேர்வு செய்யப்படாத இவர்களுக்கு பணிநிரந்தரம் வழங்க முடியாது எனவும், தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்தப் பணியில் பணியாற்றிய இவர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கும்படி, போக்குவரத்து ஆணையர் அளித்த பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், தற்காலிக அடிப்படையில் 10 முதல் 15 ஆண்டுகள் வரை பணியாற்றிய இவர்கள், பணிநிரந்தரம் கிடைக்கும் என்று இலவு காத்த கிளி போல காத்திருக்கின்றனர். உயர் நீதிமன்றம் மற்றும் பிற துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களை நிரந்தரம் செய்ய அரசு தயங்குவது ஏன் எனத் தெரியவில்லை.

இவர்களுக்கு பணிநிரந்தரம் வழங்குவது குறித்து இரண்டு மாதங்களில் முடிவெடுத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உள்துறை செயலாளருக்கு உத்தரவிடப்படுகிறது. உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் பொதுப் பணித் துறை மூலம் பணிக்கு அனுப்பப்பட்டுள்ள ஒப்பந்தப் பணியாளர்களையும் பணிநிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும். வேலையில்லாமல் பொருளாதார சிக்கலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். பணி பறிப்பு எனும் கத்தி இவர்களின் தலை மீது தொங்கிக் கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளார்.

Tags : Supreme Court , RDOs throughout Tamil Nadu Permanence of employment for contract employees working in the office: High Court order to the State
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...