பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் காட்டுப்பாக்கத்தில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் பென்ஜமின் வழங்கினார்

திருவள்ளூர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான கேஜிடி.கௌதமன் தலைமையில் 10, 12ம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு, 2 பெண்களுக்கு, தையல் இயந்திரம், 3 நபர்களுக்கு இஸ்திரி பெட்டி, 3 நபர்களுக்கு காது கேட்கும் கருவி, 3 பெண்களுக்கு காய்கறி விற்பனைசெய்ய தள்ளுவண்டி, 2 ஆயிரம் நபர்களுக்கு அன்னதானம், 2 ஆயிரம் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா காட்டுப்பாக்கத்தில் நடைபெற்றது. விழாவில் ஊரகத் தொழில் துறை அமைச்சரும், மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஜி.திருநாவுக்கரசு, முன்னாள் எம்எல்ஏ இரா.மணிமாறன், வைத்யநாதன், ஏ.மணவாளன், ஊராட்சித் தலைவர் ஷீலாசரவணன், ஒன்றிய கவுன்சிலர் எம்.கண்ணன், துணைத் தலைவர் செந்தில்குமார், கிளை செயலாளர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் சென்னீர்குப்பம், செம்பரம்பாக்கம், பாரிவாக்கம், பானவேடு தோட்டம், கோலப்பன்சேரி, வயலாநல்லூர், காவல்சேரி, கண்ணம்பாளையம், சோரஞ்சேரி, அன்னம்பேடு ஆகிய ஊராட்சிகளில் அன்னதானம் மற்றும் சேலைகள் வழங்கப்பட்டன.

Related Stories:

More
>