×

நிலக்கரி இறக்குமதி செய்ய டேன்ஜெட்கோ கோரியுள்ள டெண்டர் ரத்து இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை: நிலக்கரி இறக்குமதி செய்ய டேன்ஜெட்கோ கோரியுள்ள டெண்டர் ரத்து இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மின் வாரியத்திற்கு 1330 கோடி ரூபாய் மதிப்பில் 20 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான டெண்டர் அறிவிப்பு ஜனவரியில் வெளியிடப்பட்டது. இரண்டு கோடி ரூபாய்க்கு மேலான டெண்டர் என்றால் விண்ணப்பிப்பதற்கு குறைந்தது 30 நாட்கள் அவகாசம் தர வேண்டும்.

ஆனால் இந்த டெண்டரில் பங்கேற்பதற்கு விண்ணப்பிக்க 15 நாட்கள் தான் அவகாசம் தரப்பட்டு உள்ளது. இது டெண்டர் விதிமுறைகளுக்கு முரணானது.இந்தியாவில் வெளிவரும் இதழ்களில் டெண்டர் விளம்பரம் வெளியிட்டிருக்க வேண்டும்.

அதையும் மேற்கொள்ள தவறி விட்டனர். எனவே டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும், வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான டெண்டருக்கு தடைவிதிக்க கோரி தூத்துக்குடியை சேர்ந்த நிலக்கரி நிறுவனர் திருமலைச்சாமி வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், டெண்டர் சமர்ப்பிக்க கூடுதல் காலஅவகாசம் அளிக்க உத்தரவிட மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

நிலக்கரி இறக்குமதி செய்ய டேன்ஜெட்கோ கோரியுள்ள டெண்டர் ரத்து இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதர நிறுவனங்களும் டெண்டரில் பங்கேற்கும் வகையில் முக்கிய வணிக நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Danjetko ,Chennai , Coal, Import, Chennai, High Court, Order
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!