×

கேரளாவில் மீனவர்களுடன் நடுக்கடலுக்கு சென்று மீன் பிடித்தார் ராகுல் காந்தி : மீனவர்கள் படும் துன்பங்களை நேரடியாக பார்த்ததாக உருக்கம்!!

திருவனந்தபுரம் : கேரளாவுக்கு 3 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,
கொல்லம் வாடி துறைமுகத்தில் இருந்து மீனவர்களுடன் ஒரே படகில் கடலுக்கு சென்றார்.
சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் கடலில் மீனவர்களுடன் வலைவீசி மீன்பிடித்தார். பின்னர் படகில் வைத்து மீனவர்கள் அவருக்கு உணவு சமைத்து கொடுத்தனர். அதை ராகுல்காந்தி மிகவும் ருசித்து சாப்பிட்டார். அதன் பிறகு அவர்கள் கரைக்கு திரும்பினார். அதைத் தொடர்ந்து கொல்லம் தங்கசேரி கடற்கரையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மீனவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது, நான் இன்றுதான் மீனவர்கள் படும் துன்பங்களை நேரடியாக பார்த்து தெரிந்து கொண்டேன். இன்று நாங்கள் கடலில் சென்று வலை விரித்தோம். நாங்கள் விரித்த வலையில் ஏராளமான மீன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஏமாற்றம்தான் மிஞ்சியது. அதாவது மிக குறைந்த அளவு மீன்களே சிக்கின. அதன்பின்னர்தான் மீனவர்கள் படும் துன்பங்களை நான் புரிந்து கொண்டேன். இது என் வாழ்வில் புது அனுபவம்.

படகில் வைத்து மீனவர்கள் எனக்கு மீன் உணவு சமைத்து கொடுத்தனர். பின்னர் உங்களது குழந்தைகளை எப்படி வளர்க்க விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். அப்போது அவர்கள் எந்த காரணம் கொண்டும் மீன்பிடி தொழிலுக்கு எங்கள் குழந்தைகளை அனுப்ப மாட்டோம் என்றனர். இதன்மூலம் மீன்பிடி தொழிலில் உள்ள கஷ்டம், ஆபத்து குறித்து தெரிந்து கொண்டேன் என்றார்.

Tags : Kerala ,Rahul Gandhi , ராகுல் காந்தி
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...