ஊழலற்ற ஆட்சியை அளித்தேன்: மோடி என்ன மோடியோட தாத்தாவையும் சந்திப்பேன்...நாராயணசாமி ஆவேசம்.!!!!

புதுச்சேரி: புதுச்சேரியில், நமச்சிவாயம் உள்ளிட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினர் என 6 பேர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால், காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டதுடன், பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார். தொடர்ந்து நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்தது.

இதனால் முதலமைச்சர் நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். தற்போதைய சூழலில் புதுச்சேரி மாநிலத்தில் யாரும் ஆட்சி அமைக்க உரிமை கோராத பட்சத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் தமிழிசையின் பரிந்துரையை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து, புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து உச்சக்கட்ட கோபத்தில் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியில் 5 ஆண்டுகள் ஊழல் இல்லாமல் ஆட்சி செய்துள்ளேன். நான் ஊழல் செய்தேன் என்று நிரூபிக்க முடியுமா? நான் சவால் விடுகிறேன் என்று கோபமாகப் பேசினார்.காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க நடந்த சதியில் அதிமுகவும் பங்கேற்றுள்ளது. இன்னும் 10 நாட்களே உள்ளது. 5 ஆண்டுகள் வெற்றிகரமாக முடிச்சிருக்கேன்.

இதுஎனக்கு ஒரு மன நிம்மதி, மனநிறைவு என்றார். ஆனால் நான் எதைப்பற்றியும் அஞ்ச மாட்டேன். நான் நரேந்திர மோடிக்கே சவால் விட்டிருக்கிறேன். ஒரு ஊழலற்ற ஆட்சியை புதுச்சேரிக்கு அளித்திருக்கிறேன். நான் பிரதமர் அலுவலகத்துல அமைச்சராக இருந்தேன். விண்வெளி ஆராய்ச்சித் துறை அமைச்சரா இருந்தேன், அணுசக்தி துறை அமைச்சரா இருந்தேன். அப்படி மன்மோகன் சிங்குடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன்.

இந்த 5 ஆண்டுகாலம் ஊழலில்லாத ஆட்சியை கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன். யாரும் நாராயணசாமி ஊழல் செய்தார் என்று சொல்ல முடியாது. நிரூபிக்க முடியுமா? நான் சவால் விடுகிறேன். மோடிக்குத் தெரியும் நாராயணசாமி யாருன்னு, மோடியையும் சந்திப்பேன், மோடியோட தாத்தாவையும் சந்திப்பேன் என்றும் நாராயணசாமி தனது உச்சக்கட்ட கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Related Stories: