×

எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்-ஹெலிகாப்டரில் மலர் தூவி வரவேற்பு

சூளகிரி :சூளகிரி தாலுகா சீபம் கிராமத்தில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. விழாவில் சீபம், உத்தனப்பள்ளி, நாயக்கனப்பள்ளி, அலேசீபம், உங்கட்டி, பங்கனஅல்லி, கொம்மேப்பள்ளி, துப்புகானப்பள்ளி, சூளகிரி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில், 500 மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு அடக்கினர். விழாவினை கிருஷ்ணகிரி எம்பி செல்லக்குமார், ஓசூர் முன்னாள் எம்எல்ஏ மனோகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். சாமனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சாமில் பாஷா, ஒன்றிய கவுன்சிலர் சம்மங்கி, விழா ஏற்பாட்டாளர் ராமமுர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில், ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பளிக்கப்பட்டது.

Tags : Ox Festival , Choolagiri: A bullock-dropping ceremony was held at Seepam village in Choolagiri taluka yesterday.
× RELATED கும்மனூரில் எருது விடும் திருவிழா -300 காளைகள் பங்கேற்பு