×

35வது கொண்டை ஊசி பகுதியில் குண்டும் குழியுமான சாலை சீரமைப்பு

வால்பாறை :  வால்பாறை முதல் ஆழியாறு வரை உள்ள மலைவழிச்சாலையில் பல இடங்களில் சாலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், 35வது கொண்டை ஊசி பகுதியில் தற்போது அமைக்கப்பட்ட புதிய சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. பயணிக்கும் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து விபத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இச்சாலையில் தம்பதி குழந்தையுடன் விழுந்து காயமடைந்தார்.

இது குறித்து நேற்று தினகரன் நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அப்பகுதியில் உள்ள சாலை பணிகளை சீரமைத்து வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : 35th Putty Putty Road Renovation , Valparai: Road upgrades are underway at several places on the mountain road from Valparai to Azhiar. In which
× RELATED விசைப்படகுகளை சீரமைப்பதில் மீனவர்கள்...