×

மராட்டியம், கேரளா உட்பட 5 மாநிலங்களில் இருந்து வருவோருக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்!: டெல்லி அரசு அதிரடி..!!

டெல்லி: மஹாராஷ்டிரா, கேரளா உட்பட 5 மாநிலங்களில் இருந்து டெல்லி வருவோருக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் வெகுவாக குறைந்து வந்த கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக மஹாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர் மத்தியபிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பிட்ட 5 மாநிலங்களில் இருந்தும் டெல்லி வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

வரும் 26ம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 15ம் தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று டெல்லி எல்லைகளில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே உருமாற்றம் அடைந்த மேலும் ஒரு புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டிருக்கிறது. கேரளா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று கர்நாடக அரசு சமீபத்தில் அறிவித்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த நடைமுறையில் 3 நாட்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக கர்நாடக அரசு கூறியுள்ளது. இதனிடையே நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 13,742 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்த மேலும் 104 பேர் உயிரிழந்தனர். இதுவரை 1 கோடியே 21 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Tags : Maratha ,Kerala , Marathi, Kerala, Corona Negative Certificate, Delhi
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...