×

கொரோனா காரணமாக யு.பி.எஸ்.சி. தேர்வை தவறவிட்டவர்களுக்கு கூடுதலாக வாய்ப்பு வழங்க முடியாது!: மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: கொரோனா காரணமாக யு.பி.எஸ்.சி. தேர்வை தவறவிட்டவர்களுக்கு கூடுதலாக வாய்ப்பு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் வாய்ப்பு வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான தேர்வுகளை யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டுக்கான தேர்வுகள் மே மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு அக்டோபரில் நடந்தது.

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களில் புயல் மழை காரணமாக தேர்வை பலர் எழுத முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் வயது வரம்பின் அடிப்படையில் கடைசி முறையாக தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தவர்களும் தேர்வை தவறவிட்டனர். இதையடுத்து, கொரோனா பாதிப்பு மற்றும் பொதுமுடக்க விதிகளால் யு.பி.எஸ்.சி. தேர்வுகளை எழுத முடியவில்லை. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடைசியாக தேர்வு எழுத வேண்டிய வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அச்சமயம் கொரோனா பாதிப்பு காரணமாக யு.பி.எஸ்.சி. தேர்வை தவறவிட்டவர்களுக்கு கூடுதலாக வாய்ப்பு வழங்க முடியாது என்று தெரிவித்து, அது சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : UPSC ,Supreme Court , Corona, UPSC Choice, extra chance, Supreme Court
× RELATED தனிப்பட்ட வெறுப்பால் அவமானப்படுத்திய...