×

இந்திய வான் வழியாக பாக். பிரதமர் இம்ரான் விமானம் பறக்க அனுமதி: மத்திய அரசு பெரிய மனசு

இஸ்லாமாபாத்: இந்திய வான்பகுதி வழியாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் விமானம் பறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் 2019ல் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள பாலகோட்டில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை குண்டு வீசி அழித்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் போக்கு நிலவுகிறது. இதன் காரணமாக, இருநாடுகளும் தங்களின் வான் எல்லைக்குள் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, கடந்தாண்டு அமெரிக்கா, சவுதி அரேபியாவிற்கு பிரதமர் மோடி செல்வதற்காக பாகிஸ்தான் வான்வெளி மீது அவர் செல்லும் விமானம் பறப்பதற்கு அந்நாட்டிடம் மத்திய அரசு அனுமதி கேட்டது. ஆனால், அனுமதி தருவதற்கு பாகிஸ்தான் மறுத்து விட்டது. ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 2 நாள் பயணமாக நேற்று இலங்கை சென்றார். இதற்காக, அவர் செல்லும் விமானம் இந்திய வான் எல்லையில் பறக்க அனுமதிக்கும்படி, மத்திய அரசிடம் பாகிஸ்தான் அரசு அனுமதி கேட்டது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த பயணத்தின் போது இலங்கை அதிபர் கோத்தபயே ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோரை இம்ரான் கான் சந்தித்து பேசுகிறார்.

Tags : Bach ,Imran ,government , Bach via Indian air. Prime Minister Imran allowed to fly: Federal Government Big Mind
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு