மீண்டும் செய்திகள் வழங்க முடிவு ஆஸ்திரேலியாவில் பேஸ்புக் சமாதானம்

கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் பேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் வெளியிட்டால், ராயல்டி செலுத்த வகை செய்யும் சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதனால், பேஸ்புக்கின் விளம்பர வருவாய், செய்தி நிறுவனங்களுக்கு செல்லும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, ஆஸ்திரேலிய பேஸ்புக் நிறுவனம் தனது இணையதளத்தில் செய்திகள் பகிரும் வசதியை முடக்கியது. இந்நிலையில், இருதரப்பும் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு உள்ளதால், செய்திகளை பகிர்வதற்கான தடையை விரைவில் விலக்கி கொள்ள இருப்பதாக ஆஸ்திரேலிய பேஸ்புக் மேலாண்மை இயக்குனர் வில்லியம் ஈஸ்டன் தெரிவித்தார்.

Related Stories:

>