வன்னியர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு எனக்கூறி நோட்டுக்காகவும் சீட்டுக்காகவும் ராமதாஸ் பேரம் நடத்துகிறார்: வேல்முருகன் குற்றச்சாட்டு

சேலம்: சேலத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நிறுவன தலைவர் வேல்முருகன்அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை என்பதை வலியுறுத்தி, ஓமலூரில் வருகிற 28ம் தேதி எங்கள் கட்சி சார்பில் வாழ்வுரிமை மாநாடு நடக்கிறது. பினாமி அரசாக செயல்பட்டு வரும் எடப்பாடி அரசு, தமிழக உரிமையை காவு கொடுத்து வருகிறது. அடுக்கடுக்காக துரோகம் செய்து வரும் பாஜ, அதிமுக கூட்டணிக்கு சரியான பாடம் கற்பிக்கும் வகையில், வரும் சட்டமன்ற தேர்தலில் அந்த கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்.

தேர்தலை மனதில் வைத்து பாமக, வன்னியர்களுக்கு 20சதவீதம் உள் ஒதுக்கீடு தரவேண்டும் என கேட்டு வருகிறது. ராமதாசும், அன்புமணி ராமதாசும் வன்னியர்களை ஏமாற்றி வருகின்றனர். தனது உயிரே போனாலும் தனி ஒதுக்கீடு வேண்டும் என்றார் ராமதாஸ். அவரது மகன் மந்திரியானவுடன், அந்த கோரிக்கையை கைவிட்டார். கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி சட்ட கல்லூரி ஆகிய சொத்துகள் எல்லாம் கைவிட்டு போய்விடக்கூடாது என்பதற்காக, அவரது பெயருக்கு மாற்றிக்கொண்டார். பாமக தற்போது உள் ஒதுக்கீடு என்ற கோரிக்கையை சீட்டுக்காகவும் நோட்டுக்காகவும் தான் கேட்டு வருகிறது. வன்னியர்கள் மீது உண்மையான பற்று இருந்தால், அதிமுகவில் இருந்து வெளியேறி தனியாக தேர்தலை சந்திக்க தயாரா? வரும் தேர்தலில் தமிழக மக்கள் அதிமுகவிற்கு சரியான பாடம் புகட்டுவார்கள். திமுக ஆட்சி அமைப்பது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More
>