×

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் சார்பில் புதிய திட்டங்கள் துவக்கம்

சென்னை: தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு தொழிலாளர் நல நிதி செலுத்துவோருக்கு புதிய நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:  தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் 78வது வாரிய கூட்டத்தில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி அரசு அங்கீகாரம் பெற்ற தையற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெரும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு தையல் இயந்திரம் வாங்குவதற்கு உதவித் தொகை வழங்கப்படும். மேலும் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் எழுதும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பயிற்சி உதவித்தொகை வழங்கப்படும். இந்த புதிய நலத்திட்டங்களில் பயனடைய விரும்புவோரின் விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. தொழிலாளியின் மாத ஊதிய உச்ச வரம்பு அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்ந்து 25 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, ‘‘ செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தேனாம்பேட்டை, சென்னை - 6 ’’ என்ற முகவரியிலோ அல்லது tnlwboard@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவோ அல்லது 8939782783 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Labor Welfare Board , Launch of new projects on behalf of Tamil Nadu Labor Welfare Board
× RELATED தொழிலாளர் ஆணையர் தலைமையில் தோட்ட...