×

விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் 5ம் கட்ட சுற்றுப்பயணம்: வரும் 26ம் தேதி தொடங்குகிறார்

சென்னை: விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னையில் மு.க.ஸ்டாலின் 5ம் கட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழக சட்டசபை தேர்தலை எதிர்க்கொள்ளும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ‘‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் சட்டமன்ற தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து வருகிறார். இதுவரை 4 கட்டமாக உங்கள் தொகுதியில் என்ற பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் முடித்து உள்ளார். அப்போது அந்தந்த மாவட்டத்துக்கு உட்பட்ட அந்த தொகுதியைச் சேர்ந்த, கிராமம் மற்றும் வார்டு பகுதிகளை சேர்ந்த மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் வரும் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை 5ம் கட்டமாக பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

இதுகுறித்து திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” 5ம் கட்டசுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். அதன்படி வருகிற 26ம் தேதி காலை 8 மணி விழுப்புரம் வடக்கு மாவட்டம் ஜீவனூர், நான்கு முனை கூட்டு சாலை, விழுப்புரம் வடக்கு. மதியம் 1 மணி காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சார்பில் கலைஞர் திடல், மதுராந்தகம் ஹை-வே ஓட்டல் எதிரில் உத்திரமேரூரில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
27ம் தேதி காலை 8 மணி காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சார்பில் கரசங்கால், படப்பை தாம்பரம். மதியம் 1 மணி சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் வி.எஸ்.மணி நகர் விரிவு, வடபெரும்பாக்கம் சாலை மாதவரத்திலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

28ம் தேதி மதியம் 1 மணி சென்னை மேற்கு, சென்னை தெற்கு, சென்னை தென்மேற்கு மாவட்டம் சார்பில் ஓ.எம்.ஆர். சாலை, கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. திடலிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த பிரசாரத்தின் போது பொதுமக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களையும் பெறுகிறார். இறுதியில் மக்கள் முன்னிலையிலேயே அந்த மனுக்கள் பெறப்பட்ட பெட்டி சீல் வைக்கப்படும். தொடர்ந்து திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் மக்களின் அனைத்துக் கோரிக்கை மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Stalin ,Vetappuram, Kanchepuram, Chennai , DMK leader Stalin's 5th phase tour in Villupuram, Kanchipuram, Chennai starts on the 26th
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...