×

மீண்டும் வெடி விபத்து நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆலோசனை

பெங்களூரு: மாநிலத்தில் மறுபடியும் வெடி விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.  பெங்களூருவில் இது தொடர்பாக எச்.டி.குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``ஷிவமொக்கா மாவட்டத்தில் நடைபெற்ற வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் முடியவில்லை சிக்கபள்ளாபுரா மாவட்டம் ஹிரேநாகவல்லி கிராமத்தில் மற்றொரு வெடி விபத்து ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர்.  இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் நேரத்தில் அமைச்சர்கள் நேரத்துக்கு தகுந்தால் ேபால் பதில் கொடுத்தால் மட்டும் போதாது சட்டவிரோத குவாரிகள் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அரசு அதிகாரிகள் சட்டங்களை கவனத்தில் வைத்துக்கொண்டு பணி புரிவதில்லை.

சுரங்கம் மற்றும் கனிம துறை அமைச்சர் மண்டியாவுக்கு சென்று இடத்தை ஆய்வு செய்து வந்துள்ளார். ஆனால் அங்கு என்ன நடந்து வருகிறது என்பது குறித்து எனக்கு தகவல் உள்ளது. மக்கள் கூட பணம் சம்பாதிப்பவர்களை புகழ்ந்து பேசி வருகின்றனர் தவிர நியாயமானவர்களை புகழ்வதில்லை. அதிகாரிகள் ஆய்வு நடத்தி வந்த பின்னர் இது போன்ற சம்பவம் நடந்துள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஜெலட்டின் பயன்படுத்துவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் ஏன் நடைபெறுகிறது என்று கேள்வி எழுப்பினார். மாநிலத்தில் வெடி விபத்துக்ள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மாநில அரசு மீது மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. இடஒதுக்கீடு விஷயத்தில் சமுதாயங்கள் இடையே பிரிவு, குழப்பங்கள் ஏற்படுவதற்கு முன் அரசு விழித்துக்கொண்டு மக்கள் தொகை அடிப்படை ஆதாரத்தின் அடிப்படையில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Former Chief Minister ,Kumaraswamy , Explosion, heavy action, Coomaraswamy, counseling
× RELATED முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ்-ன்...