×

ஊட்டி அருகே மசினகுடி சாலையில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை விரட்டிய காட்டு யானை

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து மசினகுடி செல்லும் சாலையில் காட்டு யானைகள் அடிக்கடி வந்து நிற்பதும், வாகனங்களை விரட்டுவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், ஊட்டி - மசினகுடி சாலையில் சீகூர் பாலம் அருகே ஒரு காட்டு யானை வருகிறது. இதை கண்டு இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்திவிட்டு சுற்றுலா பயணிகள் காத்திருக்கின்றனர். வெகு நேரம் இந்த  காட்டு யானை சாலையிலேயே அங்குமிங்குமாக நடக்கிறது. பின்னர், ஒரு கார் மட்டும்  யானையை கடக்க முயற்சிக்கிறது. அப்போது, அந்த காரின் பின் ஒரு பெண் ஸ்கூட்டரில் செல்கிறார். உடனே அந்த பெண்ணை யானை விரட்டுகிறது. யானை விரட்டுவதை பார்த்த அந்த பெண், ஸ்கூட்டரை சாலையில் போட்டுவிட்டு  அங்கிருந்து தப்பி ஓடுகிறார். பின்னர், ஸ்கூட்டரை காட்டு யானை காலில் போட்டு மிதித்து சேதப்படுத்துகிறது. இதுபற்றி சுற்றுலா பயணிகள் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


Tags : Masinagudi Road , Wild elephant chases woman on scooter on Machinagudi road near Ooty
× RELATED கல்லட்டி பகுதியில் இரவு முழுக்க...