‘தலை’மையின் கவனத்தை ஈர்க்க பழநி கோயிலில் 108 பேருடன் அதிமுக மாஜி எம்பி மொட்டை

பழநி: நாமக்கல் முன்னாள் அதிமுக எம்பி சுந்தரம். இவர் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் வர வேண்டும் என வேண்டி, தனது ஆதரவாளர்கள் 108 பேருடன் திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நேற்று முடி காணிக்கை செய்து வழிபாடு செய்தார். தொடர்ந்து ஆனந்த விநாயகர் கோயிலில் வேல் வைத்து வழிபாடு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘ஆனந்த விநாயகர் முன்பு வெற்றிவேல் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தி உள்ளோம். இந்த வேலை முதல்வர் எடப்பாடியிடம் ஒப்படைக்க உள்ளேன்’’ என்றார். தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் தலைமையின் கவனத்தை ஈர்க்க அதிமுகவினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட துவங்கி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Related Stories:

>