×

குடியரசு தினத்தன்று ஸ்டென்சில் ஆர்ட் ஓவியத்தை பரிசாக வழங்கிய 14 வயது சிறுவனை பாராட்டி பிரதமர் மோடி கடிதம்


டெல்லி : குடியரசு தினத்தன்று ஸ்டென்சில் (stencil) ஆர்ட் ஓவியத்தை, பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கிய 14 வயது சிறுவன் சரண் சசிக்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார்.துபாயில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் கேரளாவைச் சேர்ந்த சரண் சசிகுமார் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்தியாவின் குடியரசு தினத்தையொட்டி இந்திய பிரதமரின் உருவத்தை ஓவியமாக வரைந்தார். இந்த படமானது 90 செமீ x 60 செமீ அளவு கொண்டது.

இந்த படத்தை கடந்த மாதம் துபாய் வந்திருந்த இந்திய வெளியுறவுத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறையின் துணை மந்திரி வி. முரளீதரனிடம் நேரடியாக வழங்கினார். அந்த படத்தை இந்திய பிரதமரிடம் வழங்கவும் அந்த மாணவர் கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து அந்த படத்தை மந்திரி பிரதமரிடம் வழங்கினார்.இதனைப் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி தன்னை ஓவியமாக வரைந்த சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்தார்.மேலும் பிரதமர் மோடி, அந்த சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், தங்களின் ஓவியம் தேசத்தின் மீதான அன்பையும் பாசத்தையும் பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ள மோடி, இன்னும் பல அழகான கருத்துகளுடன் படங்களை வரையவும், கல்வித்துறையில் சிறந்து விளங்கவும் தனது வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.தனது ஓவியத்தை பாராட்டிய பிரதமர் மோடிக்கு மிக்க நன்றி என ட்விட்டரில் பதிலளித்துள்ள சரண், தன்னை போன்று வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு இதுபோன்ற வாழ்த்துக்கடிதம் உத்வேகம் அளிக்கும் என தெரிவித்துள்ளார்.           


Tags : Modi ,Republic Day , பிரதமர் மோடி
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...