×

போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற மத்திய பாஜ அமைச்சர் விரட்டியடிப்பு :கிராமத்திற்குள் நுழைய கடும் எதிர்ப்பு

ஷாம்லி:உத்தரபிரதேசத்தில் வேளாண்ட சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளை சந்திக்க தூதுக்குழுவை அனுப்பிய மத்திய அமைச்சர் சஞ்சீவ் பாலியனை, கிராமத்தில் நுழைய மக்கள் எதிர்ப்பு  ெதரிவித்ததால் அவர் அங்கிருந்து கிளம்பினார். உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தின் பைன்ஸ்வால் கிராமத்தை சேர்ந்த  விவசாயிகள், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ேபாராட்டங்களை  நடத்தி வருகின்றனர். அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக  மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் சஞ்சீவ்  பாலியன் தலைமையிலான குழு சென்றது. அவருடன், உத்தரபிரதேச மாநில அமைச்சர்கள்,  பாஜக நிர்வாகிகள் உடன் சென்றனர். முன்னதாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை  நடத்துவதற்காக போராட்டம் நடக்கும் இடத்திற்கு முன்பாக சில மீட்டர்  தூரத்தில் தூதுக்குழு ஒன்று அனுப்பப்பட்டது.

ஆனால், கிராமத்திற்குள் நுழைவதற்கான வழியில் விவசாயிகள் டிராக்டர்களை வழிமறித்து தூதுக்குழு கிராமத்தில் நுழைய எதிர்ப்பு தெரிவித்தனர். இதுமட்டுமின்றி முர்தாபாத்தில் பாஜகவினருக்கு எதிராக  கோஷங்களையும் எழுப்பினர். இதனால் அமைச்சர் பாலியனின் ஆதரவாளர்களுக்கும், கிராமவாசிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதையறிந்த மத்திய அமைச்சர் சஞ்சீவ் பாலியன் மற்றும்  அவரது ஆதரவாளர்கள் சிலர் காரில் சென்று, கிராம மக்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். ஒருகட்டத்தில் விவசாயிகள் சங்கத் தலைவரையோ, நிர்வாகிகளையோ சந்திக்க மறுத்துவந்தனர். அப்போது விவசாய சங்க தலைவர் காப் சவுத்ரி கூறுகையில், ‘அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக தலைவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தாங்களும் ஒரு விவசாயிகளாக பேச  வேண்டும். அதற்கு முன் அவர்களை சந்தித்து பேச விரும்பவில்லை’ என்றனர். இதனால், கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : Central Bhaja ,Minister , பாஜ அமைச்சர்
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...