×

மக்களுக்குப் பயனளிக்கும்: பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர தொடர்ந்து வலியுறுத்தல்: மத்தியமைச்சர் பிரதான் பேட்டி.!!!

டெல்லி: பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வருவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவெடுக்க வேண்டும் என மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். நாடு முழுவதும் தற்போது பெட்ரோல்,  டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல்  92.59-க்கும், டீசல் விலை லிட்டர் 85.98க்கும் விற்பனையாகிறது.  ராஜஸ்தான், மபி.யில் பெட்ரோலின் விலை செஞ்சுரி  அடித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை 90க்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகிறது. உலக கச்சா எண்ணெய் விலை ஏற்றம் அடைந்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதாக மத்திய அரசு தொடர்ந்து  கூறிவருகிறது. ஆனால், மத்திய அரசின் வரியும் மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரியும் கடுமையாக விதிக்கப்படுவதால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இதற்கிடையே, நாகலாந்தில்  பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை மாநில அரசு குறைத்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.18.26 லிருந்து ரூ.16.04 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோலுக்கான வரி 25% முதல் 26.80% குறைக்கப்பட்டுள்ளதால் விலையும் குறைந்துள்ளது  என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பினால் பெட்ரோல் டீசல் நுகர்வோர் விலையில் ஏற்றம்  ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் சப்ளை குறைந்துள்ளது. கச்சா உற்பத்தியும் குறைந்துள்ளது. கச்சா விலை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும் என்றார். பெட்ரோலியப் பொருட்களை  ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வாருங்கள் என்றுதான் நாங்கள் தொடர்ந்து கேட்டு வருகிறோம், இது மக்களுக்குப் பயனளிக்கும். ஆனால் ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா அரசு வரி மூலம் அதிக வருமானம் ஈட்டியது என்பதை சோனியா காந்தி அறிந்து கொள்ள வேண்டும் என்று தர்மேந்திர பிரதான் கூறினார். கொரோனா பொது முடக்கத்தின்போது மத்திய மற்றும் மாநில  அரசுகளின் வருவாய் மிகக். வேலைகளை அதிகரிக்க பட்ஜெட்டின் பெரும்பகுதியை வெவ்வேறு துறைகளுக்கு வழங்கினோம் என்றும் தெரிவித்தார்.


Tags : Minister ,Pratan , Benefit to the people: Continuing insistence to bring petroleum products under GST: Interview with Union Minister Pradhan !!!
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...