மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான கட்டணம் உயர்வு: தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: நீட் தேர்வுக்கான கட்டணத்தை உயர்த்தி தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவ படிப்புகளான எம்.எஸ், எம்.டி பி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்க நீட் தேர்வு கட்டயாமாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படியில் ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த போதிலும், நீட் தேர்வு ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

தற்போது வரை பல உயிரிழப்புகளும் அதனால் ஏற்பட்டுள்ளன. ஆனால் அரசு அதற்கு கருணை காட்டவில்லை. இந்நிலையில் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக் கட்டணத்தை தேசிய தேர்வுகள் ஆணையம் உயர்த்தியது. இது தொடர்பாக தேசிய தேர்வுகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பட்டியலின பிரிவினருக்கான நீட் தேர்வு கட்டணம் ரூ.2,750-ல் இருந்து ரூ.3,835 ஆகவும், பொது, ஓபிசி பிரிவினருக்கான நீட் தேர்வு கட்டணம் ரூ.3,750-ல் இருந்து ரூ.5,015ஆக வும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீட் தேர்வு கட்டணத்தில் ஜிஎஸ்டி வாரியாக பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.765 விதிக்கப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணத்தை டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் மூலம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>