×

வேளாண் விரிவாக்க மையத்தில் வாங்கிய தரமற்ற நிலக்கடலை விதையால் இழப்பு-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி புகார்

தேனி : தரமற்ற நிலக்கடலை விதையால் இழப்பு ஏற்பட்டதாக சின்னமனூர் சேர்ந்த விவசாயி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு, நிலக்கடலை விதைகளை கொட்டி போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சின்னமனூர் அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காளிதாசன். இவர், நேற்று தேனி கலெக்டர்  அலுவலக நுழைவு வாயிலில், தான் கொண்டு வந்திருந்த நிலக்கடலை விதைகளை கொட்டி நியாயம் கேட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: சின்னமனூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நிலக்கடலை விவசாயம் செய்வதற்காக தலா ஒரு கிலோ ரூ.58 வீதம்  144 கிலோ நிலக்கடலை விதைகளை கொள்முதல் செய்தேன். இதில், 100 கிலோ விதைகளை கொண்டு விவசாயம் செய்ததில் 70 சதவீத விதைகள் முளைக்கவில்லை.  

இதனால், உழவு செய்தது விதை நடவு செய்தது, நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சியது என அனைத்து உழைப்பு வீணாகிவிட்டது. இது குறித்து வேளாண் விரிவாக்க மையத்தில் கேட்டபோது, ‘இந்த விதையை  எண்ணை ஆக்கிக் கொள்ளுங்கள் என்று கேலி செய்கின்றனர். எனவே, இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

தொடர்ந்த தான் கொண்டு வந்திருந்த தரமற்ற நிலக்கடலை விதைகளை தேனி கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் காண்பித்து தனக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

Tags : Agricultural Expansion Center , Theni: Theni Collector's Office, a farmer from Chinnamanur, said that the loss was due to substandard groundnut seeds.
× RELATED திருக்கழுக்குன்றம், செம்பாக்கத்தில்...