×

பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை கட்டாயம்: புதிய விதிமுறைகளை வெளியிட்டது விமானப் போக்குவரத்துதுறை

டெல்லி: வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான புதிய விதிமுறைகள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. டெல்லி விமான நிலையத்தில் நவீனமயமாக்கப்பட்ட ஆன்லைன் சேவை தொடங்கியது. ஏர் சுவிதா என்ற இணையத்தில் கொரோனா பரிசோதனைக்கு பதிவு செய்யலாம். பயணிகள் சுயமாக தங்கள் விவரங்களைத் தாக்கல் செய்யலாம். கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று உறுதி செய்யும் மருத்துவ அறிக்கையை பதிவிடுவதும் கட்டாயமாகிறது.

மரணம் போன்ற அவசர கால பயணிகளும் கூட வீட்டு தனிமைப்படுத்துதலைத் தவிர்க்க இந்த இணையதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் 14 நாட்களுக்கு அவர்களின் உடல்நிலையை சுய கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். இருப்பினும், இங்கிலாந்து, ஐரோப்பா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளுக்கு தனி நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Air Transport Department , Corona test mandatory up to 72 hours before departure: New rules issued by the Department of Civil Aviation
× RELATED விமானங்களில் அவசரகால அறிவிப்புகளை...