×

இலவச பயண அட்டையுடன்தான் மூத்த குடிமக்கள் பயணிக்கிறார்களா? ஆய்வு செய்ய எம்டிசி உத்தரவு

சென்னை: மாநகர் போக்குவரத்துக்கழகம், அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா டோக்கன்கள் மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் தற்போது 6 மாதத்திற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாநகர் போக்குவரத்துக்கழக பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணிக்க ஏதுவாக மாதத்திற்கு 10 டோக்கன்கள் வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் பேருந்து நடத்துனரிடம் இந்த டோக்கன்களை கொடுத்து கட்டணம் ஏதும் இல்லாமல் பயணம் செய்து வருகின்றனர். இவ்வாறு நடத்துனரிடம் சமர்ப்பிக்கும் டோக்கன்களுக்கு பதிலாக மாற்று பயணச்சீட்டை வழங்கும்போது நடத்துநர், மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பழைய டோக்கன்கள் மேல் பிப்ரவரி 2021, மார்ச் 2021, ஏப்ரல் 2021, மே 2021, ஜூன் 2021, ஜூலை 2021 என ரப்பர் முத்திரையிட்டு வழங்கப்பட்டுள்ளது.

எனவே இதனை அனைத்து நடத்துநர்களும் தெரிந்துகொண்டு மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயண அட்டையை சரிபார்க்க வேண்டும். மேலும் பயண டோக்கன்கள் குறிப்பிடப்பட்டுள்ள ‘கீ’ எண், மாதம் சரியாக உள்ளதா என சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதேபோன்று அனைத்து பயணச்சீட்டு பரிசோதகர்களும், பரிசோதனையின்போது மூத்த குடிமக்கள் சரியான பயணஅட்டை, அதற்கு உரிய டோக்கன்கள் உபயோகப்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : MTC , Do senior citizens travel with a free travel card? MTC instructed to inspect
× RELATED தாம்பரம் – சென்னை கடற்கரை ரயில்கள்...