தேர்தலில் பாமகவுக்கு எதிராக எங்கள் குடும்பம் இருக்கும்: காடுவெட்டி குருவின் தங்கை செந்தாமரை

* குரு மரணத்திற்கு பிறகு உங்கள் குடும்பத்திற்கு ராமதாஸ் என்ன செய்தார்?

அண்ணன் மரணத்திற்கு பிறகு ராமதாஸ் எங்களுக்கு துரோகம் மட்டும் தான் செய்தார். வீடு புகுந்து என் அம்மாவை அடித்தார். என் அண்ணன் சமாதியில் விளக்கு ஏற்றக்கூடாது என்று கூறினார். அவர் எங்களுக்கு நல்லது எதுவும் செய்யவில்லை. நான் வேலையில் இருக்கக்கூடாது என்று நினைத்தார். வீட்டில் உள்ள அனைவர் மேலும் வழக்கு போட்டார். அந்த கட்சிக்கு எங்கள் அண்ணன் உழைத்ததற்கு ராமதாஸ் இதை தான் பிரதிபலனாக செய்துள்ளார்.

* பாமகவில் முழு விருப்பத்துடன் தான் குரு இருந்தாரா?

அண்ணன் உயிரோடு இருக்கும்போது கூட ராமதாஸை எந்த வீட்டு விஷேசத்திற்கும் கூப்பிட மாட்டார். ‘நானே தெரியாத் தனமாக பாமகவிற்கு சென்று மாட்டிக்கொண்டேன். நீங்கள் எல்லாம் வரக்கூடாது’ என்று அண்ணன் எங்களிடம் கூறுவார்.

* ராமதாஸ், குரு ஆகியோருக்கு இடையிலான நட்புறவு எப்போது பிரிந்தது?

2011க்கு பிறகு இருவரிடமும் நல்ல ஒரு உறவு கிடையாது. அன்புமணி எப்போது அரசியலில் நுழைந்தாரோ அப்போதே நட்புறவில் விரிசல் விழுந்தது. அண்ணனை பழிவாங்க திட்டமிட்டார்கள். 2011க்கு பிறகு பாமகவில் இருந்து விலக வேண்டும் என்றே அண்ணன் நினைத்தார். கட்சியை விட்டு விலகி விடவா என்று எங்களிடமும் கேட்டார். எங்கு சென்றாலும் அண்ணனுடைய பெயர் தான் வரும். அன்புமணி பெயர் வரவில்லை என்று நினைத்து தான் அவர்கள் எதிர்ப்புடன் செயல்பட்டார்கள். அண்ணன் நடத்தும் கூட்டங்களில் அன்புமணி தலையை குனிந்துகொண்டு தான் உட்கார்ந்திருப்பார். எங்கள் அண்ணனுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்று ராமதாஸ் குடும்பத்திற்குள்ளேயே சண்டைகள் நடந்துள்ளது.

* சட்டமன்ற தேர்தல் வருகிறது. உங்கள் குடும்பத்தின் அரசியல் நிலைப்பாடு என்ன?

தேர்தலை பொறுத்தவரை பாமகவிற்கு எதிராகவே எங்களின் குடும்பம் இருக்கும். 2011க்கு பிறகு எங்கள் அண்ணன் எப்போதும் மன உளைச்சலிலேயே இருந்தார். அந்த அளவிற்கு அவருக்கு மன கஷ்டத்தை கொடுத்தார்கள். மருத்துவமனையில் இருந்தபோது கூட எங்கள் அண்ணனை நிம்மதியாக இருக்கவிடவில்லை. அவர் இறந்த பிறகு எங்கள் குடும்பத்தையும் அவர்கள் நிம்மதியாக இருக்கவிடவில்லை. அண்ணனின் நினைவிடத்தில் கோயில் கட்டுவதாக இருந்தோம். ஆனால், அன்றைய தினம் 144 தடை போட்டு எங்களை கோயில் கட்டவிடாமல் செய்தார்கள். எங்கள் மீது வழக்கு போட்டார்கள்.

* பிரசாரத்தில் குமரியை கழற்றிவிட்ட சி.எம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்டங்கள் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். இந்த முறை குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை தென் மாவட்ட சுற்றுப்பயணங்களுடன் மேற்கொள்வதை அவர் தவிர்த்தார். குமரி மாவட்டத்தில் முதல்வர் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசுவார் என்று எதிர்பார்த்த அதிமுகவினர் சுற்றுப்பயண திட்டம் அமையாததால் கடும் ஏமாற்றம் அடைந்தனர். அடுத்து சட்டமன்ற கூட்ட தொடர் முடிந்ததும், தேர்தல் அறிவிப்பு என்று தகவல் வெளியாகி வரும் நிலையில் இனி இறுதி கட்ட பிரசாரத்திற்கே வர வாய்ப்பு உள்ளது. அதற்கு மற்றொரு காரணமும் அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளும் திமுக கூட்டணி வசம் உள்ளன. கடந்த மக்களவை தேர்தலில் குமரி தொகுதி காங்கிரஸ் வசம் சென்றது. அடுத்து சட்டமன்ற தேர்தலுடன் மக்களவை தேர்தலும் நடைபெற உள்ளது. குமரி மாவட்ட தொகுதிகளை பா.ஜ கேட்டு வரும் நிலையில் தற்போது பிரசாரம் இங்கு தேவையில்லாத ஒன்றாக அமையும், தொகுதி பங்கீடு முடிந்த பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணமும் அதிமுகவினர் வசம் எழுந்திருக்கலாம் என்றும், இதுவே பயண திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் கட்சியினர் கூறி வருகின்றனர்.

Related Stories:

More
>