×

சென்னிமலை ஆண்டவர் சும்மா விடமாட்டார்

சென்னிமலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், தேர்தல் பொறுப்பாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகளின் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய ஜெயராமன், ‘‘கடந்த உள்ளாட்சி தேர்தலில் சேர்மன் பதவி கிடைக்காததால், அ.தி.மு.க.வினர் சிலரே உள்ளடி வேலைகள் பார்த்து விட்டீர்கள். கட்சிக்கு துரோகம் செய்து விட்டீர்கள். இந்த சென்னிமலை ஆண்டவர் உங்களை சும்மா விடமாட்டார். இதை செய்தவர்கள் நாசமாய் போய்விடுவார்கள்’’ என பேசினார். இதனால், நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

* கணக்கை துவக்க திணறிய அதிமுக
1952ல் நடந்த முதல் சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்.வி.சுவாமிநாதன் வெற்றி பெற்றார். 1957ல் நடந்த அடுத்த தேர்தலிலேயே இங்கு சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட சுப்பிரமணியராஜா வெற்றி பெற்றார். 1962 தேர்தலில் மீண்டும் சுவாமிநாதன் வென்றார். 1967ல் முதன்முறையாக திமுக சிவகங்கையை கைப்பற்றி 1971 தேர்தலிலும் தக்கவைத்தது. இருமுறையும் சேதுராமன் வெற்றி பெற்றார். 1977ல் மீண்டும் தொகுதியை கைப்பற்றிய காங்கிரஸ் அதன் பிறகு நடந்த 1980, 1984 தேர்தல்களிலும் வெற்றி பெற்றது. 1989ல் மீண்டும் திமுகவை சேர்ந்த பா.மனோகரன் வெற்றி பெற்றார்.

9வது சட்டமன்ற தேர்தல் வரை அதிமுக இத்தொகுதியில் கணக்கை தொடங்க முடியவில்லை. 1991 தேர்தலில் தான் முதன்முறையாக அதிமுகவை சேர்ந்த கேஆர்.முருகானந்தம் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1996ல் திமுக சார்பில் போட்டியிட்ட தா.கிருஷ்ணன், 2001ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.சந்திரன் ஆகியோர் வெற்றி பெற்றனர். 2006 மற்றும் 2011 தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எஸ்.குணசேகரன் வெற்றி பெற்றார். இதுவரை 15 தேர்தல்களை சந்தித்துள்ள சிவகங்கை சட்டமன்ற தொகுதி அனைத்து முக்கிய கட்சிகள் சார்ந்த வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர் உள்ளிட்டோரும் தேர்வு செய்யப்பட்ட பன்முகம் கொண்ட தொகுதியாக விளங்குகிறது.

Tags : Lord of Chennimalai , The Lord of Chennimalai will not leave you idle
× RELATED மதரீதியாக வாக்கு சேகரித்த புகாரில்...