×

தனியே... தன்னந்தனியேவா..? அச்சத்தில் தேமுதிக நிர்வாகிகள்

கடந்த 2005ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேமுதிக, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு, அத்தேர்தலில் ஓரளவுக்கு கணிசமான வாக்கு வங்கியை பெற்றது. இதையடுத்து 2011ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, 41 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 29ல் வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு அதிமுகவுடன் ஏற்பட்ட மோதலால் மக்கள் நல கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதிலும் தோல்வி. தேர்தல் நேரத்தில் இவர்கள் நடத்தும் கூட்டணி பேரம் மக்கள் மனதில் அதிருப்தியை ஏற்படுத்தியது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தது. இத்தேர்தலில் அதிமுகவுடன் சேர்ந்து தேமுதிகவும் தோற்றது. தற்போது அதிமுக கூட்டணியில் இருப்பதாக அவ்வப்போது இக்கட்சி மேல்மட்டத்தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

ஆனால், அதிமுக இவர்களை கண்டுகொண்டதாக தெரியவில்லை. காரணம் வரும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக  கூட்டணியில் 40 சீட் வரை தேமுதிக எதிர்பார்ப்பதுதான். ஆனால், ஒற்றை இலக்கத்தில்தான் ஒதுக்கீடு செய்யப்படும் என அதிமுக தலைமை கறார் காட்டி வருகிறதாம். இதனால், முந்தைய தேர்தல்களின்போது பேரம் பேசுவதுபோல, தனித்து போட்டி என்ற கோஷத்தை அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா கையில் எடுத்துள்ளார். இந்த முடிவு கட்சி நிர்வாகிகள் மட்டத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்காம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளிடையே பிரேமலதாவின் தனித்து போட்டி என்ற அறிவிப்பு பீதியை கௌப்பியிருக்காம். ‘‘தனித்து நின்னா எதுவும் தேறாது. கடனாளியாயிடுவோம். அய்யா சாமி ஆளை விடுங்க’’ன்னு இப்பவே அலறத் தொடங்கிட்டாங்களாம். பலர் கட்சியிலிருந்து விலகவும் திட்டமிட்டு வர்றாங்களாம்.


Tags : Astonya ,Devuka , Alone ... Tannanthanieva, Temujin executives in fear
× RELATED தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற...