×

மாநிலங்களவை தேர்தல் குஜராத்தில் 2 இடங்களிலும் பாஜ வெற்றி

அகமதாபாத்: குஜராத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் 2 இடங்களில் பாஜ வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். குஜராத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமத் படேலும், பாஜ எம்.பி. அபய் பரத்வாஜும் மரணமடைந்தனர்.  இதனால், காலியான 2 மாநிலங்களவை இடங்களுக்கும் இடைத்தேர்தல் மார்ச் 1ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பாஜ சார்பில் தினேஷ் அனவாடியாவும், ராம்பாய் மொக்ரியாவும் வேட்பாளர்களாக  அறிவிக்கப்பட்டனர். வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த நிலையில் அதனை திரும்ப பெற நேற்று கடைசி நாளாகும். இதனால், 2 இடங்களுக்கு இருவர் மட்டுமே போட்டியிட்டதால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.



Tags : Gujarat , BJP wins 2 seats in Gujarat
× RELATED மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் 2024...