திருவனந்தபுரத்தில் பாஜ போராட்டம் பயங்கர வன்முறை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் ேவலை கேட்டு போராடி வரும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ., நடத்திய போராட்டத்தில் வன்முறை ெவடித்தது. தடியடி மற்றும் கல்வீச்சில் போலீசார் உட்பட 10க்கு மேற்பட்டோர்  காயமடைந்தனர். கேரள அரசு தேர்வாணைய தேர்வு எழுதி ராங்க் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு வேலை வழங்குவதற்கு பதிலாக தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதை கண்டித்து கடந்த சில நாட்களாக திருவனந்தபுரத்தில்  ேபாராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த போராட்டங்களுக்கு காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் மாணவர்கள் சங்கம் நடத்திய  ேபாராட்டத்தில் வன்முறை வெடித்தது.

நேற்று பா.ஜ. இளைஞர் அமைப்பான யுவமோர்சா தொண்டர்கள் தலைமை செயலகம் முன் போராட்டம் நடத்தினர். அப்போது சிலர் தலைமை செயலகத்திற்குள் நுழைய முயன்றனர். போலீசார் அவர்களை தண்ணீரை பீய்ச்சி விரட்டினர். ஆனால்  போராட்டக்காரர்கள் கலையவில்லை. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். போராட்டக்காரர்களில் சிலர் போலீசாரை தாக்கினர். இதில் ஒரு போலீஸ் அதிகாரி காயம் அடைந்தார். தடியடியில் 10க்கு மேற்பட்ட பா.ஜ., தொண்டர்கள்  காயமடைந்தனர்.

Related Stories: