எல்ஐசி.யின் பீமா ஜோதி ஆயுள் காப்பீடு அறிமுகம்

புதுடெல்லி: லைப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா, பீமா ஜோதி என்ற ஆயுள் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. லைப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா, பீமா ஜோதி என்ற பாதுகாப்பு மற்றும் சேமிப்பு இணைந்த  தனிநபர் சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பாலிசிகளை முகவர்கள் அல்லது இடைத்தரகர்கள் மூலம் ஆப்லைனிலும், www.licindia.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனிலும் வாங்கலாம். இந்த திட்டத்தின் கீழ்  வாங்கப்படும் பாலிசியின் ஒவ்வொரு ஆண்டு முடிவிலும், பாலிசி தொகையில் ஆயிரம் ரூபாய்க்கு ₹ 50 கூடுதல் தொகை வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக  1,00,000மும், அதிகபட்ச தொகைக்கு வரம்பு இல்லை. இந்த பாலிசியை பொருத்தமட்டில், பாலிசியில் காலத்தில் 5 ஆண்டுகளை கழித்து விட்டு, விரும்பிய தொகையை உறுதி பணமாக அடைய மாதம்  எவ்வளவு பிரீமியம் செலுத்த வேண்டும் என்பதுடன் 15 முதல் 20 ஆண்டுகள் வரையிலான கால கட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.   இந்த பாலிசியில் சேர குறைந்தபட்ச வயதாக 90 நாட்கள் முடிவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக  60 வயது வரை சேரலாம். இதற்கான பிரீமியம் தொகையை ஒவ்வொரு மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு என குறிப்பிட்ட இடைவெளியில் செலுத்தலாம். தற்போதைய சூழலில், வட்டி விகிதம் வேகமாக சரிந்து வரும் நிலையில்,  இத்திட்டத்தில் உத்தரவாத கூடுதல் தொகை அளிப்பது ஒரு முக்கிய சிறப்பம்சமாகும்.

Related Stories:

>