மெக்சிகோ விமானப்படை விமானம் நொறுங்கியது: 6 ராணுவ வீரர்கள் பலி

மெக்சிகோ:  மெக்சிகோவின் சலாபா விமான நிலையத்தில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான லியர்ஜெட் 45 என்ற விமானம் நேற்று முன்தினம் காலை புறப்பட்டு சென்றது. வெராகிரஸ் மாகாணத்தில் விமானம் சென்றபோது திடீரென  விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியதோடு தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ராணுவ வீரர்கள் 6 பேர் உயிரிழந்ததாக மெக்சிகோராணுவத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால்  விபத்துக்கான காரணம், விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. விசாரணை நடக்கிறது.

Related Stories: