பயணிகள் வசதிக்காக 10 இடங்களில் நடை மேம்பாலம் மத்திய ரயில்வே அமைச்சர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

சென்னை:  தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக அடிப்படை வசதிகள் உள்ளடக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்படுள்ளன. இந்த திட்டங்களை மத்திய ரயில்வே அமைச்சர்  பியூஷ் கோயல் டெல்லியில் இருந்து  காணொலி காட்சி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் சில திட்டங்களை தொடக்கி வைத்தார்.  பயணிகளின் வசதிக்காக அம்பத்தூர், எளாவூர், அரக்கோணம், மாம்பலம், மேட்டுப்பாளையம்,  திருப்பூர், கங்கை கொண்டான், கடைய நல்லூர், நாகர்கோவில், வாஞ்சி மணியாச்சி ஆகிய 10 இடங்களில் 23.32 கோடி செலவில் நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நடைமேம்பாலங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த அமைச்சர், தமிழகத்தில் எழும்பூர், மாம்பலம், தாம்பரம், திருவள்ளூர், ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய 6 இடங்களில் 16.61 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நகரும் படிக்கட்டுக்கள் தொடங்கி  வைத்தார்.  மேலும் செங்கல்பட்டு, திருவள்ளூர், ஈரோடு, சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மணியாச்சி, தஞ்சாவூர், விழுப்புரம் உள்ளிட்ட 18 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா நிறுவப்பட்டுள்ளன. காட்பாடியில் 4  கோடி செலவில் அமைக்கப்பட்ட நவீன வாகன நிறுத்தம் வசதிகள் ஆகியவற்றையும் மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்.

Related Stories:

>