×

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்தப்படும்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக முதல்வர் எடியூரப்பா பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன் காவிரியில் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இதனால் பத்திற்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு காவிரி நீர் கிடைக்கிறது. அந்த வரிசையில் தற்போது காவிரியில் இருந்து கூடுதலாக கிடைக்கும் 45 டிஎம்சி தண்ணீரை பயன்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.14,400 கோடி செலவில் காவிரி, வைகை மற்றும் குண்டாறு ஆகிய நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்த முடிவு செய்துள்ளதுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டியுள்ளார்.

தமிழக அரசின் இந்த செயல்பாடு ஏற்று கொள்ளும் வகையில் இல்லை. காவிரி நீர்பாசன பகுதியில் எந்த திட்டம் செயல்படுத்த வேண்டுமானாலும் காவிரி கண்காணிப்பு ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று விதிமுறை உள்ளது. எனவே தமிழக அரசு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு எதிராக சட்ட போராட்டம் நடத்த கர்நாடக அரசு தயாராகவுள்ளது.

Tags : Cavir ,Karnataka ,Edurepa , Edyurappa
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...