காற்று மாசை குறைக்‍க இந்தியா, சீனா உள்ளிட்ட 17 நாடுகள் முன்வர வேண்டும்!: அமெரிக்‍கா வலியுறுத்தல்..!!

வாஷிங்க்டன்: காற்று மாசுபாட்டை குறைக்க இந்தியா உள்ளிட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ள நிலையில் சுற்றுச்சூழல் விவகாரத்திற்கான அமெரிக்க சிறப்பு தூதர் ஜான் கெரி, காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவை குறைப்பது மிக அவசியம் என தெரிவித்துள்ளார். 2050ம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய மாசுபாடு என்ற அளவை எட்ட வேண்டும் என்றும் அதற்கு கரியமில வாயுவை காற்றில் அதிகமாக கலக்கும் இந்தியா உள்ளிட்ட 17 நாடுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

உலகிலேயே அதிகளவில்  கரியமில வாயுவை காற்றில் கலந்து வரும் சீனா, இந்தியா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். காற்று மாசுபாட்டை குறைக்க இன்னும் 10 ஆண்டுகளில் நாம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறோம் என்பது மிகவும் முக்கியம் என்று ஜான் கெரி குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஐநா தலைமையில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் அவர் பேசியதாவது, கடந்த 2015ம் ஆண்டு பாரிஸ் பருவநிலை மாற்றம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் அப்போது இந்திய அரசும் இணைந்தது. இதனையடுத்து கிரீன்ஹவுஸ் வாயுக்கள் வெளியீட்டை ஒப்பந்தத்த வரம்புகளுக்கு உட்பட்டு இந்தியா 33-35% வரை வெகுவாகக் குறைத்தது. இதேபோல ரஷ்யா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தாங்கள் தொழிற்சாலைகள் மூலமாக வெளியிடும் மாசுவின் அளவை குறைத்தால் 2050ம் ஆண்டுக்குள் ஐநா நிர்ணயம் செய்துள்ள இலக்கை எட்டி விடலாம் என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>