×

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டிற்குச் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை சந்தித்து வரும் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இரண்டு கோடி ரூபாய் முன்பணம் செலுத்தி விட்டு வெளிநாட்டிற்குச் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் கார்த்தி சிதம்பரம், தான் எங்கெங்கு செல்லவுள்ளார் என்பதையும், எங்கு தங்கவுள்ளார் என்பதையும் நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கார்த்தி சிதம்பரம், நீதிமன்றத்தின் அனுமதி பெற்று அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Congress ,Supreme Court ,Karthy Samarth , Congress MP Supreme Court allows Karthi Chidambaram to go abroad
× RELATED எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம்...