புதுச்சேரி மக்கள் எங்கள் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி மக்கள் எங்கள் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கிரண்பேடி அளித்த நெருக்கடியை கடந்தும் ஆட்சியை நிறைவு செய்துள்ளோம். மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தை தொடர்ந்து புறக்கணித்து வந்தது. புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து பரிந்துரையை மத்திய அரசு ஏற்கவில்லை. மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கின்றனர். மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம்தான் ஆனால் புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சி 10.20 சதவீதம் எனவும் கூறினார்.

Related Stories: