×

பிரசாரம் பண்ண வர்றேன்: - சசிகலா சத்தியம்

சசிகலா பெங்களூரில் இருந்து சென்னை திரும்பிய பிறகு 7 நாட்களுக்கும் மேலாக தொடர் ஓய்வில் இருந்தார். இந்தசூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்கனவே அதிமுகவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 10 முக்கிய நிர்வாகிகளை மட்டும் சசிகலா அழைத்து பேசியுள்ளார். அப்போது, ‘நீங்கள் சட்டமன்ற தேர்தலில் உங்களுடைய தொகுதியிலேயே போட்டியிடுங்கள், மாற்று வேட்பாளரை நிறுத்தும் போது அது சில சிக்கல்களை ஏற்படுத்தும். கட்சி உங்களுக்கு ஆதரவாக இருக்கும். நானும் பிரச்சாரம் செய்ய வருகிறேன்’ எனக்கூறியுள்ளார்.

அப்போது, சிலர் ‘நீங்க சொல்றது எல்லாம் சரிதான்மா...ஏற்கனவே இடைத்தேர்தல்ல கடன் வாங்கி செலவு செஞ்சோம். எங்களிடம் கொஞ்சம் கூட தேர்தல் செலவுக்கு காசு இல்லம்மா... இடைத்தேர்தலில் நாங்கள் தோல்வியடைந்த போது கூட எங்களை யாரும் அழைத்து ஆறுதல் சொல்லவில்லை. நாங்கள் மிகவும் மன உளைச்சலில் இருந்தோம்’ என தங்களின் மனக்குமுறலை கொட்டியுள்ளனர். பின்னர், மனம் தளராமல் இருங்கள் எல்லாம் சரியாக நடக்கும் என ஆறுதல் கூறி அவர்களை சசிகலா அனுப்பி வைத்தது தான் தற்போது அமமுக வட்டாரத்தில் பேச்சுப்பொருளாக உள்ளது.

* காரைக்குடியில சீட்டு கேட்டு அதிமுக, பாஜ மல்லுக்கட்டு...!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதில் அதிமுக, பாஜ இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இத்தொகுதியில் கடந்த 1952 முதல் இதுவரை திமுக 3 முறை, காங்கிரஸ் 4 முறை, அதிமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. 2016ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கேஆர்.ராமசாமி வெற்றி பெற்றார். சிவகங்கை பாராளுமன்ற தொகுதியை கடந்த எம்பி தேர்தலில் பாஜவுக்கு அதிமுக விட்டுக் கொடுத்தது. அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட எச்.ராஜா தோல்வி அடைந்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு தான் தொகுதி ஒதுக்கப்படும் என கட்சியினர் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான செந்தில்நாதன் எப்படியும் சீட் பெற வேண்டும் என தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்.

இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே காரைக்குடி பகுதியில் முகாமிட்டு தேர்தல் பணிகளை துவக்கி விட்டார். தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு கட்சி நிர்வாகிகளை கவனிப்பது உள்பட பல்வேறு பணிகளை முடித்து நிச்சயம் சீட் பெற வேண்டும் என பணியாற்றி வருகிறார். மறுபக்கம் பாஜ தனது பங்குக்கு சீட் பெற பல்வேறு முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இவர்களும் தேர்தல் பணிகளில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். நகரின் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஜாதிசங்கங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வருகின்றனர். தவிர தேர்தல் அலுவலகம் துவக்கவும், இவர்கள் தரப்பில் பணிகள் நடந்தது வருகிறது. காரைக்குடி தொகுதி சீட் பெற அதிமுக, பாஜவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Tags : Sasikela , I have come to propagate: - Sasikala Satyam
× RELATED நாம் ஒன்றாக வேண்டும்; அதிமுக வென்றாக...