×

‘சாதனை’ய சொல்ல சொல்லி வேதனைய கௌப்புறாய்ங்களே.. மேலிட உத்தரவை கேட்டு பாஜ நிர்வாகிகள் புலம்பல்

தமிழகத்தில் பா.ஜ. தேசிய தலைமை மற்றும் மாநில தலைமை கூட்டு ஆலோசனை நடத்தியுள்ளது. இதை தொடர்ந்து கட்சியின் கிளை நிர்வாகிகளுக்கு தேசிய தலைமையால் நேரடியாக கண்டிப்பான உத்தரவுகள் பறந்து வருகிறது. பூத் கமிட்டி நீங்கலாக மகளிர் அணி மற்றும் இளைஞர் அணியை முழுமையாக பயன்படுத்தப் போகிறார்களாம்.  மகளிர் அணி தான் முதல் குறி. இவர்கள் மண்டல வாரியாக வீடு வீடாக செல்ல வேண்டும். சொந்தக்காரர்களை போல வீட்டில் உள்ளவர்களிடம் சகஜமாக பேச வேண்டும். பேச்சுவாக்கில் அப்படியே பெண்கள், ஏழைகளுக்கு மத்திய அரசு செய்துள்ள சாதனைகளை சொல்லி அவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும்.

இரண்டாவதாக வருவது இளைஞர் அணி. இவர்கள் பைக் மூலம் பிரசாரம் செய்ய பறக்கணுமாம்.
ஒரு குழுவில் 20 பேர் மட்டும் இருக்கணும்.
இதைத்தவிர கூட்டம் போடச் சொல்லியிருக்காங்களாம். முக்கிய தெரு சந்திப்புகளில் கூடி சின்ன கூட்டமா போட்டு, அங்கயும் பாஜ செய்த ‘சாதனை’களை சொல்லணுமாம்.
இதே டைப்புல திண்ணைக் கூட்டத்தையும் நடத்தணும்.
ஒவ்வொரு மண்டலம், ஊராட்சி  ஒன்றிய பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் வாரம் ஒரு நிகழ்ச்சியை நடத்தணும். மேலிட உத்தரவு இதுதான்.

‘காய்கறி, மளிகைல தொடங்கி விலைவாசி ராக்கெட் வேகத்துல பறந்துட்டு இருக்கு. போதாக்குறைக்கு காஸ் சிலிண்டர் விலையையும் ஏத்தி வச்சிருக்கீங்க. ஒவ்வொரு வீட்டுலயும் கொதிச்சுப் போயிருக்காங்க.. இந்த லட்சணத்துல வீடுவீடா போய் மத்திய அரசு சாதனைகளை சொன்னா எங்க நெலம என்னாகும்னு நெனச்சுப் பாத்தீங்களா...’ என்று மகளிர் அணி உள்ளிட்ட பாஜ நிர்வாகிகள் புலம்புகிறார்களாம். ஆனால் மேலிடத்திடம் சொல்ல முடியாதே. இளைஞர் அணியின் புலம்பல் வேறு ரகமாக இருக்கிறது. ‘பெட்ரோல், டீசல் விலையை கேட்டு வண்டிய எடுக்குறதே இல்ல.. இதுல பைக் பிரசாரமா..வௌங்கிரும்..’ என்று நொந்துபோய் கிடக்கிறார்கள்.

Tags : baja , BJP executives lament over the above order
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...