ஜெயலலிதா 73-வது பிறந்த நாள் விழா மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

சென்னை: முன்னாள்முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 73வது பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து மருத்துவ அணி, மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 73-வது பிறந்தநாளை மருத்துவ அணியின் சார்பில் ஏழை எளியோருக்கு உதவி செய்கின்ற வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்குகின்ற விழாக்கள் பல நடத்திடவும், அன்னதானம், ரத்ததானம், கண்தானம் மற்றும் சிறப்பான வகையில் பொதுநல மருத்துவ முகாம்களை நடத்திட கழக மருத்துவ அணி சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி மருந்துகளை சிறப்பான முறையில் வழங்கி, தமிழக மக்களின் உயிர்களை காப்பாற்றியதற்கும், தமிழகத்திலுள்ள அனைத்துத் பகுதி மக்களும் பயனுறும் வகையில் ‘‘அம்மா மினி கிளினிக்’’ ஏற்படுத்தி மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் முதல்வர், துணை முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சருக்கு ஆகியோருக்கு கழக மருத்துவ அணி தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. கிராம புறங்களில் குறிப்பாக அரசு பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் பயின்ற ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் பயிலும், வாய்ப்புகள் குறைவதை அறிந்த அரசு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி சமூக புரட்சிக்கு வித்திட்டத்தோடு இல்லாமல் இந்த இடஒதுக்கீட்டில் மூலம் தனியார் மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு படிப்பு முடிக்கும் வரை கல்லூரி கட்டணம் மற்றம் தங்கும் விடுதி கட்டணத்தை மாநில அரசே ஏற்கும் வண்ணம் சுழல்நிதி ஏற்படுத்தியதோடு அதனை, நடப்பாண்டிலேயே 313 அரசு பள்ளி மாணக்கர்களுக்கு மருத்துவ படிப்பிலும், 92 மாணக்கர்களுக்கு பல் மருத்துவ படிப்பிலும் கிடைக்க பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் சுகாதாரம் மேம்பட செய்த முதல்வருக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>