பசு அறிவியல் தேர்வு எழுத 5 லட்சம் பேர் விண்ணப்பம்

கொல்கத்தா: மத்திய அரசின் பால் மற்றும் கால்நடை துறை அமைச்சகம் சார்பில் கடந்த 2019ம் ஆண்டு ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் அமைக்கப்பட்டது. நாட்டு பசுக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வருகிற வியாழனன்று பசு அறிவியல் தேர்வு நடத்தப்படுகின்றது. ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் இந்த தேர்வில் பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம். தேர்வுக்கான பதிவு இலவசமாகும். தேர்வு எழுதுவதற்காக நாடு முழுவதும் இதுவரை 5 லட்சத்து 10,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படுகின்றது. இந்த தேர்வுக்கான பாடக்குறிப்புக்களை காமதேனு ஆயோக் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில், “கதிரியக்க எதிர்ப்பு பண்புகள் பசு சாணத்தில் நிறைந்துள்ளது. இந்தியா மற்றும் ரஷ்யாவில் அணு மையத்தில் கதிரியக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்காக பசு சாணம் பயன்படுத்தப்படுகிறது. இந்திய பசுக்கள் தங்களது முதுகில் அமைந்துள்ள திமில் மூலமாக சூரியனின் சக்தியை ஈர்க்கும் ஆற்றலை பெற்றுள்ளன. அறிவியல் அற்றது எதுவும் இல்லை” என கூறப்பட்டுள்ளது. 

Related Stories:

More
>